கட்டுமானத் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவி: தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் வழங்கினார். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Thursday, 25 May 2023

கட்டுமானத் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவி: தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் வழங்கினார்.


மதுரை மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பாக  இன்று  (25.05.2023) நடைபெற்ற விழாவில்,  தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், கட்டுமானத் தொழிலாளர்களுக்கு வீட்டு வசதி திட்டம் மற்றும் கட்டுமானம் உள்ளிட்ட அமைப்புசாரா தொழிலாளர்கள் மொத்தம் 362 பயனாளிகளுக்கு ரூபாய் 1 கோடியே 3 இலட்சத்து 34 ஆயிரம் மதிப்பிலான  நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா,  தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத் தலைவர் பொன்குமார், மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், தொழிலாளர் இணை ஆணையர் பெ.சுப்பிரமணியன்,, கூடுதல் தொழிலாளர் ஆணையர் தி.குமரன், மாநகராட்சி துணை மேயர் தி.நாகராஜன்  ஆகியோர் உடன் உள்ளார்கள். 

No comments:

Post a Comment

Post Top Ad