பாலமேடு மார்நாடு கருப்பச்சாமி அருள்மிகு ராக்காயி அம்மன் ஆலய கும்பாபிஷேகம். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Monday, 22 May 2023

பாலமேடு மார்நாடு கருப்பச்சாமி அருள்மிகு ராக்காயி அம்மன் ஆலய கும்பாபிஷேகம்.


மதுரை மாவட்டம், பாலமேடு அருள்மிகு மார்நாடு கரும்பச்சாமி மற்றும் ராக்காயம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த விழாவையொட்டி, கோயில் முன்பாக அமைந்துள்ள யாகசாலையில், அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கடஸ்தாபனம், வேதிகா அர்ச்சணைகள், அங்குரார்பணம், முதல் கால யாக வேள்விகள், பிரவேசபலி, மகா பூர்ண ஆகுதி  பூஜைகள் நடத்தப்பட்டு, யாத்ரா தானம், குணங்கள் புறப்பட்டு, கோயிலை வலம் வந்து, மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.


அதைத் தொடர்ந்து, அலங்காரம், தீபாராதனை, அன்னதானம் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர். இதற்கான ஏற்பாடுகளை, பூட்டி கொடுத்த வகையறாக்கள், விழா கமிட்டியினர் செய்து இருந்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad