புதியன விரும்பு கோடை கொண்டாட்ட சிறப்பு பயிற்சி முகாம். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Monday, 22 May 2023

புதியன விரும்பு கோடை கொண்டாட்ட சிறப்பு பயிற்சி முகாம்.


பள்ளிக் கல்வித் துறை மதுரை மாவட்டம். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் 2023-24 ஆம் ஆண்டுக்கான மாதிரி பள்ளிகள் மானிய கோரிக்கை அறிவிப்பு எண் 2.5.11ன் படி மாணவர்களின் தனித் திறன்களை மெருகேற்றும் வகையிலும் கோடை விடுமுறையை பயனுள்ள வகையில் செலவழித்திடவும் கோடை கொண்டாட்ட சிறப்பு பயிற்சி முகாம்கள்  23.05 25 முதல் 28.5.23 வரை ஐந்து நாட்கள் புதியன விரும்பு கோடை கொண்டாட்ட சிறப்பு பயிற்சி முகாம் ஊட்டி லாரன்ஸ் பள்ளி மற்றும் சிஎஸ்ஐபொறியியல் கல்லூரியில் நடைபெறுகிறது. 


இப்பயிற்சி முகாமுக்கு 10 மற்றும் 11ஆம் வகுப்பு முடித்துள்ள மாணவ மாணவியர்களின் கல்வி இலக்கியம் அறிவியல் கலை  தலைமைத்துவம் வினாடி வினா போன்றவற்றில் சிறந்து விளங்கும் 1100 மாணவர்களை தெரிவு செய்து அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி மதுரை மாவட்டத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மற்றும் மாநில அளவிலான வினாடி வினா இலக்கிய மன்ற போட்டிகளில் சிறந்து விளங்கிய முதன்மை பரிசு பெற்ற 25 மாணவ மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு 22.5.23 அன்று காலை மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் இருந்து மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கா. கார்த்திகா அவர்களின் சீரிய ஆலோசனையின் படி முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் நேர்முக உதவியாளர் கந்தசாமி அவர்களின் ஒருங்கிணைப்பு ஏற்பாட்டின் படி  இரண்டு பேருந்துகளில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். 


இப்பயிற்சி முகாமில் 56 கலை பயிற்றுநர்கள் 14 வகையான கலைகளை நடத்த திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மாணவர்களை அழைத்துச் செல்லும் நிகழ்விற்கு உதவி மாவட்ட திட்ட அலுவலர்  சரவணன் முருகன்  கார்மேகம் மாதிரி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்  செந்தில்குமார். கிட்ட ஒருங்கிணைப்பாளர் பிரேம் நேவிஸ், ஒருங்கிணைப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். முகாமில் கலந்து கொள்ளும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவும் நிகழ்ச்சி நடைபெற்றுவதற்கான வேலைகளை செய்வினை செய்வதற்காகவும் 60 தன்னார்வலர்கள் சென்னையில் இருக்கும் பல்வேறு கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் இந்த முகாமில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment

Post Top Ad