மதுரை மாவட்டம், சமயநல்லூர் அருகே அதலையில், ராமலிங்க சுவாமிகள் கோவில் திருவிழா இரண்டு நாட்கள் நடக்கிறது. இந்த திருவிழாவை காண்பதற்காக ஏராளமான பக்தர்கள் பரவை வழியாக சென்று வருகின்றனர்.

அந்த பக்தர்கள் பயன்பெறும் வகையில் பரவை பேரூராட்சியில், ராமலிங்க சுவாமிகள் அறப்பணி பேரவையின் 65 ஆவது ஆண்டு விழா நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. இந்த மோர்பந்தலை பேரூராட்சி சேர்மன் கலா மீனாராஜா தலைமை தாங்கி தொடக்கிவைத்தார். முன்னாள் பேரூராட்சி தலைவர் ராஜா அன்னதானத்தை தொடங்கி வைத்தார். இதில், ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
அதலை ராமலிங்க சுவாமி விழாவில் பல கிராமத்திலிருந்து பக்தர்கள், வாகனங்களில் வந்து தரிசித்து செல்வர்.
No comments:
Post a Comment