சோழவந்தான் பகுதியில் 3 மணி நேரத்திற்கு மேலாக கொட்டி தீர்த்த கனமழையால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Tuesday, 9 May 2023

சோழவந்தான் பகுதியில் 3 மணி நேரத்திற்கு மேலாக கொட்டி தீர்த்த கனமழையால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி.


தமிழகத்தில் வழக்கத்திற்கு மாறாக கோடை காலத்தில் கடந்த சில தினங்களாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருவது பொது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது இந்த நிலையில் மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் நேற்று இரவு சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக கொட்டி தீர்த்த கன மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பகலில் வெப்பமான சூழல் நிலவியநிலையில் இந்த மழையானது பொது மக்களுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியது குறிப்பாக கோடைகால பயிர்களுக்கு இந்த மழைஒரு வரப் பிரசாதமாக அமையும் என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர் மேலும் சித்திரை திருவிழாவிற்காக வைகை அணையில் திறந்து விடப்பட்ட தண்ணீர் வற்றாத நிலையில் கோடைகாலத்தில்  குடிநீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்பு இல்லை என்றும் பொதுமக்கள்  தெரிவித்துள்ளனர்  அடுத்தடுத்து திருவிழா காலங்கள் வர இருப்பதால் இந்த மழையானது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை.ஏற்படுத்தி உள்ளது.


மதுரை அருகே விளாங்குடி, பரவை, சமயநல்லூர், தேனூர், கருப்பாயூரணி, மதுரை அண்ணாநகர், யாகப்பநகர், வண்டியூர், மேலமடை, புதூர், பழங்காநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது, மதுரை அண்ணாநகர் வீரவாஞ்சி தெரு, காதர்மொய்தீன் தெரு, அன்பு மலர் தெருக்களில், மழை நீர் தேங்கி நிற்பதால், பொதுமக்கள் பலர் குளம் போல தேங்கியுள்ள நீரில் பயத்துடன் நடந்து சென்றனர்.  

No comments:

Post a Comment

Post Top Ad