கடந்த சில நாட்களுக்கு முன் தனியார் யூடியூப் சேனலில் டெய்லர் நாகேஷ் குறித்து ஒரு காணொளி வெளியாகி இருந்தது. அதில் தினமும் 30 முதல் 40 கிலோமீட்டர் நடந்தே சென்று கிழிந்த துணிகளை தைத்து தரும் பணியினை கடந்த 40 வருடங்களாக செய்து வரும் டெய்லர் நாகேஷ் குறித்து தகவல் வெளியாகி இருந்தது.
அந்த காணொளியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாகேஷ் தனது வாழ்வாதாரத்துக்கு உதவிடுமாறு ஒரு கோரிக்கை வைத்திருந்தார். அவருக்கு, வீட்டு மனை வழங்க உத்தரவிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அதே காணொளியை, கண்ட தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், டெய்லர் நாகேஷை தன் வீட்டுக்கு அவரது காரில் அழைத்து வந்து அவரது வாழ்வாதாரத்துக்கு தேவையான நிதியுதவியிணை அளித்து உதவினார். டெய்லர் நாகேஷ், மதுரையைச் சேர்ந்தவர்.

No comments:
Post a Comment