தங்கம் உள்ளிட்ட பொருட்களை சட்ட விரோதமாக கடத்தி வரும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. வாலிபர் நசீமிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Monday, 22 May 2023

தங்கம் உள்ளிட்ட பொருட்களை சட்ட விரோதமாக கடத்தி வரும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. வாலிபர் நசீமிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மதுரை விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, லண்டன், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், பெங்களூரு, சென்னை, மும்பை, டெல்லி, விஜயவாடா உள்ளிட்ட நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய விமானங்களில் சிலர் தங்கம் உள்ளிட்ட பொருட்களை சட்ட விரோதமாக கடத்தி வரும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. 

இதனால் வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய விமானங்களில் வரும் பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை செய்து வருகிறார்கள். இந்நிலையில் துபாயில் இருந்து வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக மதுரை விமான நிலைய சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினருக்கு தகவல் வந்தது. இதையடுத்து துபாய் விமானத்தில் வந்த பயணிகளை சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினர் தீவிர சோதனை நடத்தினர். 




 
  அப்போது ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த நசீம் என்ற பயணியின் பையை சோதனை செய்தனர். அப்போது அதில் பேஸ்ட் வடிவில் ஒரு கிலோ 565 கிராம் தங்கம் இருந்தது. அவற்றின் மதிப்பு ரூ.96 லட்சத்து 18 ஆயிரம் ஆகும். அதனை கைப்பற்றிய சுங்க இலாகா அதிகாரிகள், அதனை கொண்டு வந்த நசீமிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் சட்ட விரோதமாக தங்கத்தை கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். வாலிபர் நசீமிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

No comments:

Post a Comment

Post Top Ad