மதுரை மாவட்டம் ஆஸ்டின்பட்டி அருகே நிலையூரை சேர்ந்தவர் விஜயபாஸ்கரன் (வயது 40)தொழிலாளி. இவரது மனைவி ரேவதி .இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் விஜயபாஸ்கரன் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கணவன் -மனைவிஇடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இதைத் தொடர்ந்து விஜய பாஸ்கரன் திருச்சியில் உள்ள ஒரு பேக்கரியில் வேலைக்கு சேர்ந்து கடந்த 6 மாதமாக பணிக்கு சென்று வந்தார்.


இதன் பின்னர் அங்கும் வேலை பிடிக்காததால் விஜயபாஸ்கர் தேனிக்கு சென்று அங்கு வசிக்கலாம் என்று மனைவியிடம் தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்து வேலை செய்வதாக இருந்தால் வருகிறேன் என்று ரேவதி தெரிவித்துள்ளார். இதனால் விஜயபாஸ்கரன் தேனியில் வீடு வாடகைக்கு எடுத்து மனைவி வரும்படி அழைத்துள்ளார். அதற்கு மனைவி மறுத்து விட்டதாக தெரிகிறது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த விஜயபாஸ்கரன் நிலையூர் டாஸ்மாக் கடை எதிரில் உள்ள ஒரு மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது பற்றி ரேவதி ஆஸ்டின்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment