செங்கோல் விவகாரத்தில் அதிமுக எதையும் எதிர்க்கவும் இல்லை, எதிர்பார்க்கவும் இல்லை. திருப்பரங்குன்றம் - எம்எல்ஏ ராஜன் செல்லப்பா பேட்டி. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Sunday 28 May 2023

செங்கோல் விவகாரத்தில் அதிமுக எதையும் எதிர்க்கவும் இல்லை, எதிர்பார்க்கவும் இல்லை. திருப்பரங்குன்றம் - எம்எல்ஏ ராஜன் செல்லப்பா பேட்டி.

மதுரை அதிமுக கிழக்கு மாவட்டம் சார்பாக புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எம்எல்ஏ ராஜன் செல்லப்பா கூறுகையில்:

அதிமுக பொன்விழா ஆண்டு மாநாடு வருகிற ஆகஸ்ட் 20ஆம் தேதி மதுரை வலையங்குளம், கருப்பசாமி கோயிலுக்கு எதிரே 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் நடைபெற உள்ளது. கிட்டத்தட்ட ஐம்பது லட்சம் முதல் ஒரு கோடி பேர் வரை பங்கேற்பார்கள், நேற்று திமுகவினர் வருமான வரி சோதனையின் போது நடந்து கொண்டது மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த அதிகாரிகளை தடுத்து தாக்கியதோடு, பெண் அதிகாரியை அவமானப்படுத்துகிற சூழ்நிலையை பார்த்தோம். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, காவல்துறை செயலற்றுப் போய் கிடைக்கிறது. காவல்துறையில் மாற்றங்கள் மட்டுமே நடைபெறுகிறது, தவிர நிர்வாக ரீதியாக மோசமான நிலைக்கு காவல்துறை திமுகவால் தள்ளப்பட்டு இருக்கிறது. 


நாடாளுமன்ற செங்கோல் விவகாரம் குறித்த கேள்விக்கு: தமிழகத்து கலாச்சாரத்தை அந்த செங்கோல் அடையாளம் காட்டுவது நமக்கு பெருமை. இயற்கையாக கலாச்சார உணர்வோடு இருக்கக்கூடிய சின்னத்தை மறைக்காமல் கொண்டு செல்கிறார்கள், புதிதாக எதையும் புகுத்த வில்லை. செங்கோல் விவகாரத்தில் அதிமுக எதையும் எதிர்க்கவும் இல்லை, எதிர்பார்க்கவும் இல்லை.


முதல்வர் சிங்கப்பூர் பயணம் குறித்த கேள்விக்கு:


சிங்கப்பூரிலிருந்து புதிதாக விமான போக்குவரத்து கழகம் உருவாக்குவதற்கு அனுமதி கேட்கவில்லை, மதுரையிலிருந்து சிங்கப்பூர் விமான சேவைக்கு தான் கோரிக்கை விடுத்துள்ளார்கள். சிங்கப்பூர் ஒரு வர்த்தக நகரம் தானே தவிர தொழில் உருவாக்கும் நகரம் அல்ல. அவர் சிங்கப்பூர் சென்றதில் எந்த சிறப்பும் இல்லை.


மதுவிலக்கு விவகாரத்தில் அதிமுக நிலைபாடு குறித்த கேள்விக்கு:

அம்மா இருந்தபோது ஆண்டுக்கு 500 கடைகளை படிப்படியாக குறைப்போம் என்று அறிவித்தது போல் குறைத்துக் கொண்டே இருந்தார், அப்படி இருந்தால் பூரணமதுவிலக்குக்கு சாத்தியம் உள்ளது. மதுவிலக்கை கொண்டு வர வேண்டும் என்பது எங்களது எதிர்பார்ப்பு அதற்கான நேரம் வரும்போது அதை செய்வோம்.


அதிமுக நடத்திய முதல் தொழில் வளர்ச்சி மாநாடு சுற்றுலா மாநாடு என நிதியமைச்சர் கூறியது குறித்த கேள்விக்கு:


அந்த மாநாடு குறித்து வெள்ளை  அறிக்கை கொடுப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். தென் மாவட்டத்தில் தங்கம் தென்னரசு தொழில்துறை அமைச்சரான பிறகு தொழில் வளர்ச்சிக்கு ஒரு நல்ல வாய்ப்பு இருந்தது, புதிய திட்டங்களை கொண்டு வருவார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அது வெறும் அறிவிப்பாக இருந்து விட்டது. தங்கம் தென்னரசு தொழில்துறை அமைச்சராக இருந்தபோது அறிவித்த திட்டங்களை தற்போது மதுரைக்கு கொண்டு வருவாரா என்று கேட்க விரும்புகிறேன்.


பாஜக விட அதிமுக அடிமையாக இருப்பது போல் செயல்படக்கூடாது என உதயநிதி ஸ்டாலின் கூறியது குறித்த கேள்விக்கு:


தேவைப்படாத உதாரணத்தை மணமேடையில் உதயநிதி ஸ்டாலின் சொல்லியிருக்கிறார். 

No comments:

Post a Comment

Post Top Ad