மதுரை அருகே டெய்லர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். சேடப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Thursday, 18 May 2023

மதுரை அருகே டெய்லர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். சேடப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள எல்.பொத்தானிபட்டி பகுதியை சேர்ந்தவர் பவுன்ராஜ் (வயது 32). டி.கல்லுப்பட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் டெய்லராக வேலைபார்த்து வந்தார். இவருக்கு சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. பல இடங்களில் மருத்துவம் பார்த்தும் குணமாகாததால் இவர் விரக்தியாக இருந்ததாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் கே.பரமன்பட்டி அருகே சென்னம்பட்டியில் உள்ள தோட்டத்து வீட்டிற்கு பெற்றோரை பார்ப்பதற்காக பவுன்ராஜ் சென்றார். அங்கு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்தைக் குடித்து மயங்கிக் கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டார். 


அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பவுன்ராஜின் தாய் சின்னம்மாள் சேடப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

No comments:

Post a Comment

Post Top Ad