மே தினத்தை முன்னிட்டு திருமங்கலம் அருகே உள்ள மறவன்குளம் தனியார் ஆலை முன்பு தி.மு.க.வின் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் மே தின கொடியேற்று விழா நடந்தது.இதை மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மணிமாறன் கலந்து கொண்டு தொழிற்சங்க கொடியை ஏற்றி வைத்து பேசினார்.
தொழிற்சங்க சட்ட ஆலோசகர் தங்கசாமி முன்னிலை வகித்தார். தலைவர் லட்சுமணன், செயலாளர் கொடி. சந்திரசேகரன், பொருளாளர் மணிகண்டன் ஆகியோர் வரவேற்றனர் தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் பாண்டியன், திருமங்கலம் நகர செயலாளர் ஸ்ரீதர், நகர்மன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார், துணைத் தலைவர் ஆதவன் அதியமான், ஒன்றிய செயலாளர்கள் தங்கப்பாண்டி, முத்துராமன், நிர்வாகிகள் சின்னசாமி, செல்வம், திருக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment