நம்ம ஊரு சுப்பரு திட்டத்தின் கீழ் எழில்மிகு கிராமங்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அனீஷ் சேகர் அவர்கள் தூய்மை பணிகள் மேற்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Monday, 1 May 2023

நம்ம ஊரு சுப்பரு திட்டத்தின் கீழ் எழில்மிகு கிராமங்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அனீஷ் சேகர் அவர்கள் தூய்மை பணிகள் மேற்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.


ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் மூலம் நம்ம ஊரு சுப்பரு திட்டத்தின் கீழ் எழில்மிகு கிராமங்கள் என்ற நோக்கில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இத்திட்டத்தின் கீழ் மதுரை மாவட்டம் கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியம் சிவரக்கோட்டை ஊராட்சியில்  மாவட்ட ஆட்சித்தலைவர் அனீஷ் சேகர் அவர்கள் தூய்மை பணிகள் மேற்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

கூடுதல் ஆட்சியர் மாவட்ட முகமை திட்ட அலுவலர் அவர்கள், உணவு ஆட்சியர் (பயிற்சி) அவர்கள், சிவரக்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் .செல்வராஜ்  ஆகியோர் உடன் இருந்தனர். தமிழகம் முழுவதும் இன்று மேதினத்தை முன்னிட்டு சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது.இதில் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன.

No comments:

Post a Comment

Post Top Ad