திருமங்கலம் அருகே ஓய்வு பெற்ற துணை தாசில்தார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Thursday, 11 May 2023

திருமங்கலம் அருகே ஓய்வு பெற்ற துணை தாசில்தார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மதுரை அண்ணாநகரை சேர்ந்தவர் சிவகு மார்(வயது60). துணை தாசில்தாராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி மாலா. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சிவகுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு மனைவியை பிரிந்து தனியாக சென்றுவிட்டார். அவரது மகன் தாயுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவகுமார் திருமங்கலம் அருகே ஆலம்பட்டியில் உள்ள தனது பூர்விக வீட்டிற்கு சென்றார். 

அங்கு மனம் உடைந்த நிலையில் இருந்து வந்த அவர், நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றிய புகாரின்பேரில் திருமங்கலம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்பு சிவகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சிவகுமார் தற்கொலைக்கு என்ன காரணம்? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

No comments:

Post a Comment

Post Top Ad