மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அடிக்கடி திருட்டு சம்பவம் நடக்கின்றது. இதை சரி செய்வதற்கு திருமங்கலம் நகர் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் குடியிருப்பு மக்களுக்கு திருமங்கலம் நகர் காவல் நிலையம் சார்பாக விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.
கடந்த சில நாட்களாக திருமங்கலத்தில் தொடர் திருட்டு சம்பவம் நடக்கின்றது. அதன் காரணமாக மதுரை மாவட்ட எஸ்பி அவர்களின் ஆணைக்கிணங்க திருமங்கலம் நகர் காவல் நிலையம் சார்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. இதில் டவுன் காவல் நிலையம் நகர் காவல் நிலையம் ஆகிய பகுதிகளில் வாகனங்களில் சென்று விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர். அதில் வெளியூர் செல்லும் பொதுமக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டு செல்ல வேண்டும் என்றும் அதேபோல் ஒவ்வொரு வீடுகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.

மேலும் வீடுகளில் இரவு நேரங்களில் வெளியில் லைட்டுகளை எரியும்படி இருக்க வேண்டும் என்று விழிப்புணர்வு செய்தனர். இந்த ஏற்பாட்டை திருமங்கலம் டிஎஸ்பி மற்றும் நகர் காவல் நிலையம் சார்பாக நடைபெற்றது.
No comments:
Post a Comment