மதுரையிலிருந்து இருந்து திருமங்கலம் நோக்கி வந்துக் TN58N1615 என் கொண்ட கொண்டிருந்த அரசு பேருந்தின் பின்பக்க படிக்கட்டுக்கு மேல் பகுதியில் பக்கவாட்டில் பொறுத்தப்பட்டிருந்த தகரம் அறுந்து தொங்கிய நிலையில் காற்றில் பட,படவென அடித்து பலத்த சத்தத்துடன் ஆபத்தான நிலையில் பேருந்து இயக்கப்படுவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

தொடர்ந்து அந்த தகரம் உடைந்து காற்றில் பறந்து அவ்வழியே சென்று வரக்கூடிய இருசக்கர வாகனத்தில் செல்வோர் மீது விழுந்து, உயிர்ச்சேதம் ஏற்படககூடும் என வாகன ஓட்டிகள் அச்சமடைந்து வருகின்றனர். மேலும் வாகனத்தில் சென்ற ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இப்பொழுது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு 'இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை' என்றும் 'கோடை வெயிலை போக்க மதுரையில் அதி நவீன பேருந்து ' என்றும் மாடல் விசிறி பொருத்தப்பட்ட அரசு பேருந்து எனவும் நெட்டிசன்கள் ட்ரென்டாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment