திருமங்கலத்தில் ராணுவ அதிகாரி வீட்டில் நகை-வெள்ளிப்பொருட்கள் திருடப்பட்டது. பூட்டியிருந்த வீட்டில் நடந்துள்ள இந்த திருட்டு சம்பவம் திருமங்கலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Friday, 12 May 2023

திருமங்கலத்தில் ராணுவ அதிகாரி வீட்டில் நகை-வெள்ளிப்பொருட்கள் திருடப்பட்டது. பூட்டியிருந்த வீட்டில் நடந்துள்ள இந்த திருட்டு சம்பவம் திருமங்கலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


திருமங்கலம்  காமராஜர் வடபகுதியை சேர்ந்தவர் வேலுசாமி. இவரது மகன் சுரேஷ்(வயது42). இவர் ராணுவ அதிகாரியாக அருணாச்சலபிரதேசத்தில் வேலை பார்த்து வருகிறார். தற்போது விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையத்தில் வசிக்கும் அவரது அண்ணன் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றுவிட்டார். இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் பூட்டிக்கிடந்த அவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். 

அங்கு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 4 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்களை திருடி சென்றுவிட்டனர். இதுபற்றி அறிந்த அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் சுரேசுக்கு தகவல் தெரிவித்தனர்.  அதையடுத்து  தனது வீட்டுக்கு திரும்பிய சுரேஷ், தன்னுடைய வீட்டில் நகை-வெள்ளி பொருட்கள் திருட்டு போனது குறித்து திருமங்கலம் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷ் வீட்டில் புகுந்து நகை மற்றும் வெள்ளி பொருட்களை திருடிய மர்ம நபர்கள் யார்?உள்ளூரை சேர்ந்தவர்களா? அல்லது வெளியூர் கொள்ளை கும்பலா? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். 


மேலும் சம்பவ இடத்திற்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் வீட்டில் பதிவாகியிருந்த கைரேகைள் மற்றும் தடயங்களை பதிவு செய்தனர். பூட்டியிருந்த வீட்டில் நடந்துள்ள இந்த திருட்டு சம்பவம் திருமங்கலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

No comments:

Post a Comment

Post Top Ad