தமிழகத்தில் ஒரே ஒரு அரசு ஹோமியோபதி மருத்துவமனை மதுரை திருமங்கலம் அருகே உள்ளது இங்கு படிக்கும் மாணவர்கள் அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் மதுரை திருமங்கலம் அரசு மருத்துவமனையில் கடந்த நவம்பர் மாதம் பயிற்சி மருத்துவராக ஹோமியோபதி மருத்துவர்கள் 52 பேர் பணி அமர்த்தபட்டனர்.

இவர்களுக்கு முதல் மாதம் 11 பேருக்கு மட்டுமே உதவித்தொகை வந்ததாகவும், தொடர்ந்து ஏழு மாதங்கள் ஆகியும் 52 பேருக்கும் அரசு வழங்க வேண்டிய உதவி தொகை வரவில்லை வழங்கவில்லை என கூறி கருப்பு பேட்ச் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அரசு வழங்க வேண்டிய உதவித் தொகையை விரைவாக வழங்க வேண்டி அதுவரைக்கும் கருப்பு பேட்ச் அணிந்து ஆர்ப்பாட்டம் தொடரும் எனவும் பயிற்சி ஓமியோபதி மருத்துவர்கள் கூறுகின்றனர்.
No comments:
Post a Comment