தற்கொலை செய்த வாலிபர் உடல் போலீசுக்கு தெரியாமல் எரிக்கப்பட்டது. 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Wednesday, 10 May 2023

தற்கொலை செய்த வாலிபர் உடல் போலீசுக்கு தெரியாமல் எரிக்கப்பட்டது. 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


திருமங்கலம் அருகே உள்ள கூத்தியார்குண்டு காலனியை சேர்ந்தவர் காஞ்சி வனத்துரை. இவரது மகன் வருண்(23). நேற்று இவர் குடும்ப பிரச்சி னை காரணமாக வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து தந்தை காஞ்சி வனத்துரை, உறவின ர்களுடன் சேர்ந்து போலீசார் மற்றும் வருவாய்த் துறையினருக்கு எந்தவித தகவலும் தெரிவிக்காமல் வருணின் உடலை கூத்தியார் குண்டு சுடுகாட்டில் எரித்து விட்டனர். 

தகவல் அறிந்த நிலையூர் கிராம நிர்வாக அதிகாரி கந்தவேலு இதுகுறித்து ஆஸ்டின் பட்டி போலீசில் புகார் செய்தார். இதை யடுத்து போலீசார் காஞ்சி வனத்துரை, மகன் பாவ ஈஸ்வரன், உறவினர்கள் கார்த்திக், பிரவீன், பிச்சை ராஜா, வேல் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

No comments:

Post a Comment

Post Top Ad