உயர்கல்வியில் சேர்க்கும் பொருட்டு இன்று முதல் பயிற்சி பெற்ற உயர் கல்வி வழிகாட்டு குழுக்கள் அனைத்து அரசுமேல் நிலை பள்ளிகளிலும் செயல்படுகிறது. இதற்காக பயிற்சி பெற்ற பள்ளியின் தலைமை ஆசிரியர் அப்பள்ளியின் முதுகலை ஆசிரியர் பள்ளி மேலாண்மை குழு தலைவர் உப தலைவர் பள்ளி மேலாண்மை குழு கல்வியாளர் முன்னாள் மாணவர்கள் நாட்டு நலப்பணித் திட்ட கல்லூரி மாணவர்கள் என 1500க்கும் மேற்பட்டோர் பயிற்சி பெற்று பிளஸ் டூ தேர்வு தேர்ச்சி பெற்றவர்கள் தங்கள் விரும்பும் சிறந்த கல்லூரிகளை தேர்வு செய்யவும்.

தேர்வில் தேர்சசி அடையாதவர்கள் உடனடியாக மறு தேர்வுக்கு விண்ணப்பிக்கவும் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் மாநிலத்தில் சிறந்த கல்லூரிகளை தேர்வு செய்யவும் வழிகா ட்டல் குழு வழிகாட்ட உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையின் இச் சிறந்த வாய்ப்பினை பயன்படுத்த பிளஸ் டூ தேர்வு எழுதிய அனைவரையும் உயர் கல்விக்கு வழிகாட்ட முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் மாணவர்களை கேட்டுக் கொண்டுள்ளார்கள்.
No comments:
Post a Comment