சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் திமுக புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடைபெற்றது. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Monday, 3 April 2023

சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் திமுக புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடைபெற்றது.


மதுரை புறநகர் வடக்கு மாவட்டம், வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய திமுக சார்பாக,  முள்ளிப்பள்ளம் கிராமத்தில் திமுக புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடைபெற்றது. 

இம் முகாமிற்கு, ஊராட்சி செயலர் கேபிள் ராஜா தலைமை வகித்தார். வாடிப்பட்டி தெற்கு ஒன்றியச் செயலாளர் பசும்பொன்மாறன் துவக்கி வைத்தார். இதில், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், ஒன்றிய அவைத் தலைவர் மேலக்கால் சுப்ரமணி, சி .பி .ஆர். சரவணன்,  ஊராட்சி வார்டு உறுப்பினர் சந்தான லட்சுமி, ஜிபிஆப்செட் தெய்வேந்திரன், தென்கரை சோழராஜன், ஏசு, பால்கண்ணன், சப்பாணி, இளங்கோவன், காமாட்சி, பாஸ்கரன், மார்நாடு,  வெற்றி, சுந்தர், சங்கர், லீலாவதி, மற்றும் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad