பெருங்காமநல்லூரில் ஆங்கிலேயர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட 16 தியாகிகளின் நினைவு தினத்தை முன்னிட்டு , வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Monday, 3 April 2023

பெருங்காமநல்லூரில் ஆங்கிலேயர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட 16 தியாகிகளின் நினைவு தினத்தை முன்னிட்டு , வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

மதுரை மாவட்டம் பெருங்காமநல்லூரில்  ஆங்கிலேயர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட  16 தியாகிகளின் நினைவு தினத்தை முன்னிட்டு, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், பெருங்காமநல்லூரில்  ஆங்கிலேயர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட 16 தியாகிகளின் 103-வது நினைவு தினத்தை முன்னிட்டு, செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கீழ் உள்ள ”பெருங்காமநல்லூர் தியாகிகள் நினைவு மண்டபத்தில்” அமைந்துள்ள நினைவுத் தூணில்,  வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, (03.04.2023) மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.


இந்தியத் தேசத்தை பிரிட்டீஷ் அரசாங்கம் அடிமைப்படுத்தி ஆட்சி செய்தது. இந்த ஆட்சிக்காலத்தில் பிரிட்டீஷ் அரசாங்கம் இந்திய தேசத்தில் பல்வேறு சட்டங்களை இயற்றி தனது ஆட்சியை நிலைநிறுத்திக் கொண்டது. அவ்வாறாக இயற்றப்பட்ட சட்டங்களில் ஒன்றுதான் குற்றப் பழங்குடிச் சட்டமாகும். 1881-ஆம் ஆண்டு பிரிட்டீஷ் அரசாங்கத்தால் இந்தியாவின் மக்களை அடக்குவதற்காக இயற்றப்பட்டது. இந்தியாவின் பல மாநிலங்களிலும் பல்வேறு காலகட்டங்களில் சிறு மாற்றங்களுடன் அந்தச்சட்டம் அமுல்படுத்தப்பட்டு இறுதியாக 1916-ஆம் ஆண்டிலிருந்து தமிழ்நாட்டில் அந்தச்சட்டம் அமுல்படுத்தப்பட்டது. 


பிரிட்டீஷ் அரசாங்கத்தின் மிகக் கொடூரமான இந்த சட்டத்திற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடுமையான எதிர்ப்பு எழுந்தபோதிலும் பிரிட்டீஷ் அரசாங்கம் தனது ஒடுக்கு முறையால் இந்த சட்டத்தை தொடர்ந்து மூர்க்கமாக செயல்படுத்தியது. இந்நிலையில், மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம் பெருங்காமநல்லூர் கிராமத்தைச் சார்ந்த பொதுமக்கள் இந்தச் சட்டத்திற்கு அடிபணிய மாட்டோம் என்று எதிர்ப்பு தெரிவித்து கைரேகை வைப்பதற்கு ஒப்புதல் கொடுக்காமல் போராடினர்.


இதனையடுத்து, ஆங்கிலேயர்களின் எதேச்சதிகார சட்டத்தை எதிர்த்து போராடிய பெருங்காமநல்லூர் மக்களுக்கு எதிராக 03.04.1920-அன்று ஆங்கிலேயே அரசால் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 16 தியாகிகள் வீரமரணம் அடைந்தார்கள். அன்னாரது தியாகங்களை கௌரவிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு செய்தி மக்கள் தொடர்பு துறையின் மூலம் ரூ.147 இலட்சம் மதிப்பீட்டில் 'பெருங்காமநல்லூர் தியாகிகள் நினைவு மண்டபம்' கட்டி முடிக்கப்பட்டு, மண்டபத்தில் நினைவு தூண் நிறுவப்பட்டுள்ளது.


அந்த வகையில், பெருங்காமநல்லூரில்  ஆங்கிலேயர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட 16 தியாகிகளின் 103-வது நினைவு தினத்தை முன்னிட்டு, செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கீழ் உள்ள ”பெருங்காமநல்லூர் தியாகிகள் நினைவு மண்டபத்தில்” அமைந்துள்ள நினைவுத் தூணில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்வின்போது,  மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர்,  சேடப்பட்டி மு.மணிமாறன்,  சேடபட்டி ஊரட்சி ஒன்றிக்குழுத் தலைவர் ஜெயச்சந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad