
இந்த நூலகத்துக்கு மேலும் கூடுதலாக ரூ.12 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இந்த நூலகம் தென் தமிழ கத்தில் உள்ள அனைத்து மக்களும் பயன்படும் வகையிலும், ஆரம்பப்பள்ளி முதல் கல்லூரி வரை பயிலும் மாணவ- மாணவி கள் பயன்பெறும் வகை யிலும், பேராசிரியர்கள் முனைவர் பட்டம் பெறு வதற்கு ஏதுவாக ஆய்வு செய்யக்கூடிய புத்தகம் உள்ளிட்ட தமிழ் புத்தகங்கள் 1 லட்சத்து 20 ஆயிரம் புத்தகங்களும், 2 லட்சத்து 25 ஆயிரம் ஆங்கில புத்தகங்களும், 6000 இ-புத்தகங்களும் இந்த நூலகத்தில் மக்கள் பயன் பாட்டிற்காக வைக்கப்படும்.மேலும் பழைய காலத்து ஓலைச்சுவடிகளும் காட்சிப்படுத்தப்பட்டு வைக்கப்படுகிறது.
ஒரு ஆளுநர் என்பவர் அரசுக்கு உந்து சக்தியாக இருக்க வேண்டும். அரசு போடும் திட்டங்களை விரைந்து முடிக்க அவர் ஒத்தாசையாக இருக்க வேண்டும். ஊக்கப்படுத்து பவராக இருக்க வேண்டும். ஆனால் தமிழக அரசு எந்தப் பணிகளை மக்களுக்காக முன்னெடுத்து சென்றாலும் அதற்கு ஆளுநர் முட்டுக் கட்டையாக இருக்கிறார். காலையில் திட்டத்தை தொடங்கி மாலையில் மக்களிடம் சென்ற டைந்ததா? என்று தொடர்ந்து கண்காணித்து கொண்டிருக்கக்கூடிய முதல்-அமைச்சருக்கு ஆளுநர் தொடர்ந்து முட்டுக்கட்டையாக செயல்பட்டு வருகிறார். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது கலெக்டர் அனீஸ் சேகர், மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜித் சிங், எம்.எல்.ஏ.க்கள் கோ. தளபதி, பூமிநாதன், வெங்கடேசன் மற்றும் கவுன்சிலர் மூவேந் திரன், வட்டச்செயலாளர்கள் மகேந்திரன், ராஜேஷ் உள்பட பலர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment