
பூஜ்ஜிய நிழல் நாளில், சூரியன் உள்ளூர் மெரிடியனைக் கடக்கும்போது, சூரியனின் கதிர்கள் தரையில் உள்ள ஒரு பொருளுடன் ஒப்பிடும்போது சரியாக செங்குத்தாக விழும், மேலும் அந்த பொருளின் எந்த நிழலையும் ஒருவர் கவனிக்க முடியாது. இந்த அறிவியல் நிகழ்வு தமிழகம் முழுவதும் ஏப்ரல் மாதம் வெவ்வேறு நாட்களில் நண்பகல் 12.10 முதல் 12.22 வரையுள்ள வெவ்வேறு நேரங்களில் நிகழ்கிறது.
திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் 25-4-2023 அன்று சரியாக நண்பகல் 12.15 மணியளவில், ஏற்பட்ட நிழல் இல்லாத நிகழ்வு பற்றிய செயல்முறை விளக்கத்தினை இயற்பியல் துறை தலைவர் முனைவர் ஜெய்சங்கர் மற்றும் ஆசிரியர்கள் ராஜேந்திரன், லட்சுமிகாந்தன், முனைவர் மீனாட்சிசுந்தரம், முனைவர் கணேசன் ஆகியோர் இயற்பியல் துறை மாணவர்களுக்கு அளித்தனர். இந்த நிகழ்வில், கல்லூரியின் முதல்வர் முனைவர் வெங்கடேசன், செயலர் சுவாமி வேதானந்த, குலபதி சுவாமி அத்யாத்மனந்த, துணை முதல்வர் முனைவர் கார்த்திகேயன் மற்றும் அகத்தர உறுதி மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் சதீஷ்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
No comments:
Post a Comment