தொடர்ந்து, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார், பொதுமக்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றி அவர்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்திட வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்கள். மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சூர்யா நகர் பகுதியில் உள்ள பொதுமக்கள் சட்டமன்ற தேர்தல் நேரத்தின் போது, இப்பகுதியில் சீரான மின் விநியோகம், குடிநீர் விநியோகம், சாலை வசதி மற்றும் தெரு விளக்கு வசதி போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தார்கள்.

அதன்படி, தற்போது இப்பகுதியில் உள்ள அருண் சிட்டியில் 2 புதிய மின்மாற்றிகள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் சீரான மின் விநியோகம் உறுதி செய்யப்படும்.
அதேபோல, சுத்தமான குடிநீர் விநியோகிப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் ,மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாநகராட்சியின் மூலம் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் இப்பகுதிகளில் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை. தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார், பொறுப்பேற்ற பின்பு பொதுமக்கள் அனைவருக்கும் அரசு நலத்திட்டங்கள் முழுமையாகச் சென்றடையும் வகையில் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது, மாநகராட்சி மண்டலத் தலைவர் வாசுகி சசிகுமார் , மாமன்ற உறுப்பினர் ராதிகா உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment