திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான பெண்ணை வருகின்றனர். திருமங்கலம் சோனை மீனாநகரை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி இந்திராணி(39). ஓட்டல் நடத்தி வருகிறார். திருமங்கலம் ஜாகீர்நகரை சேர்ந்த கதிர்வேல் மனைவி நாகதுர்கா(36). இந்திராணியின் தோழியின் மூலமாக நாகதுர்காவுக்கு இந்திராணியுடன் பழக்கம் ஏற்பட்டது.

அவர் அரசு வேலைக்கு முயற்சி செய்வதை அறிந்த நாகதுர்கா, தான் திருமங்கலம் யூனியன் அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாக இந்திராணியிடம் கூறினார். இதனை நம்பி கடந்த ஆண்டு ரூ.4 லட்சத்தை நாகதுர்காவிடம், இந்திராணி கொடுத்தார். பணத்தை வாங்கி கொண்டு அரசு வேலை வாங்கி தராமல் இழுத்தடிக்கவே இந்திராணி பணத்தை திருப்பி தரும்படி கேட்டார்.
அதற்கு நாகதுர்கா மறுத்தார். அதிர்ச்சியடைந்த இந்திராணி மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத்திடம் புகார் செய்தார். அவரது உத்தரவின்படி திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான நாகதுர்காவை தேடி வருகின்றனர்.
No comments:
Post a Comment