மீனாட்சி அம்மன் கோவில் அருகே பேக் குடேனில் தீவிபத்து- பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் தீயில் கருகி நாசமாயின. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Thursday, 6 April 2023

மீனாட்சி அம்மன் கோவில் அருகே பேக் குடேனில் தீவிபத்து- பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் தீயில் கருகி நாசமாயின.


மதுரை மீனாட்சி அம்மன் மேலக் கோபுரம் அருகே உள்ள மேற்கு ஆவனி மூல வீதியில் மாடியில், அசல் சிங் என்பவருக்கு சொந்தமான பேக் குடோன் செயல்பட்டு வந்தது. இந்தநிலையில், இன்று வழக்கம் போல் குடோனை பூட்டி விட்டு சென்ற நிலையில், திடீரென தீ விபத்து ஏற்பட்டது.  

இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்து விரைந்து வந்த மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் பெரியார் தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயிணை ஒரு மணி நேரத்திற்கு மேலாக 4 தீயணைப்பு வாகனங்கள் உதவியுடன் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். தொடர்ந்து விபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் தீயில் கருகி நாசமாகின. 


மேலும், விபத்து குறித்து திலகர்திடல் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். 

No comments:

Post a Comment

Post Top Ad