ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் இந்திய வளர்ச்சி இயக்கம் இணைந்து கோடை காலத்தில் குழந்தைகளுக்கான ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழா தொடர்பான பயிற்சியை இல்லம் தேடிக் கல்வித் திட்ட தன்னார்வலர்களுக்கு வழங்கப்பட்டது. இப்பயிற்சியில் அற்புதங்களை விளக்குதல், எளிய அறிவியல் பரிசோதனைகள், விந்தை கணக்குகள், கற்பனையும் கைத்திறனும், உள்ளூர் வரைபட விளக்கம், காகிதகலை, சிந்தினையைத்தூண்டும் விளையாட்டுகள் போன்ற ஏழு தலைப்புகளில் பல்வேறு செயல்பாடுகள் பயிற்சியின் வாயிலாக வழங்கப்பட்டது.

வருகின்ற மே மாதம் 2ஆம் தேதி முதல் மதுரை மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சி/நகராட்சி/மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுடன் இணைந்து கோடையில் ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழாவை நடத்துவதற்கான ஏற்பாடுகளை திட்டமிட்டுள்ளனர்.
வானவில் மன்றம் மாநில கருத்தாளர்கள் கு. மலர்செல்வி மற்றும் ஆ.மணிமேகலை பயிற்சியின் போதுகருத்தாளர்கள் மற்றும் தன்னார்வலர்களை உற்சாகப்படுத்தினார்கள் .இப்பயிற்சிக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு பிரேம்நேவிஸ் தேவையானஏற்பாடுகளை செய்துள்ளார். வட்டார அளவில் வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார வளமைய பொறுப்பு மேற்பார்வையாளர்கள் தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளனர்
மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் மதுரை மேற்கு ஒன்றியத்தில் பாண்டியன் நெடுஞ்செழியன் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பயிற்சியினை பார்வையிட்டு தன்னார்வலர்களையும் கருத்தாளர்களையும்பாராட்டினார். மேலும் பயிற்சியின் போது நடைபெற்ற செயல்பாடுகளை உற்றுநோக்கி குழந்தைகளின் சுயசிந்தனையயும், சுய ஆர்வத்தையும் தூண்டும் விதமான செயல்பாடுகளை மகிழ்வுடன் கொண்டு செல்லவேண்டும் எனஅறிவுரைவழங்கினார்கள்.
இப்பயிற்சிக்கு கருத்தாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு தேநீர், சிற்றுண்டி, மதிய உணவு மற்றும் பயணபப்டி வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment