திருமங்கலம் அருகே உள்ள சொக்கநாதன்பட்டியை சேர்ந்தவர் முருகன் (வயது47), தொழிலாளி. இவரது மனைவி அழகம்மாள் கப்பலூரில் உள்ள ஐ.ஓ.சி.யில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இந்தநிலையில் நேற்றுகாலை வழக்கம்போல் கணவன்-மனைவி வேலைக்கு சென்றுவிட்டனர்.

மகன்-மகள்கள் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றிருந்தனர். இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவில் இருந்த ரூ.25ஆயிரம் ரொக்கத்தை திருடிக் கொண்டு தப்பினர். மாலையில் வேலை முடிந்து வீடு திரும்பிய முருகன் கதவு உடைக்கப்பட்டு பணம் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணம் திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
சமீபத்தில் வீட்டின் பராமரிப்புக்காக முருகன் ரூ.2 லட்சம் கடன் வாங்கியிருந்தார். அதில் மீதமிருந்த ரூ. 25 ஆயிரத்தை பீரோவில் வைத்திருந்த போது திருடு போய்விட்டது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment