காரியாபட்டி அருகே ஆவியூரில் அமைந்துள்ள கருப்பணசாமி கோவில் மகா கும்பாபிஷேகம் முடிந்து ஓராண்டு நிறைவுபெற்றதால் வருஷாபிஷேகம் நடத்தப்பட்டது.முன்னதாக யாகசாலை பூஜைகள் செய்யப்பட்டு புனித நீர் குடங்கள் ஊர்வலமாக கொண்டு சென்று கோபுர கலசங்களுக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டது.

மேலும் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள பரிவார தெய்வங்களான ஆண்டிச்சாமி, இருளப்பசாமி இருளாயி அம்மாள் சின்னக் கருப்பணசாமி ஆகிய சிலைகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
முன்னதாக, அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கடஸ்தாபனம், கலசபூஜைகள்,யாக வேள்விகள் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment