மதுரை அலங்காநல்லூர் அருகே டாஸ்மாக்கில் கள்ள நோட்டை மாற்றமுயன்றவர் கைது 34,000 ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Friday, 28 April 2023

மதுரை அலங்காநல்லூர் அருகே டாஸ்மாக்கில் கள்ள நோட்டை மாற்றமுயன்றவர் கைது 34,000 ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல்.


மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே சிக்கந்தர் சாவடி பகுதியில் இயங்கி வரும் அரசு மதுபான கடையில் வாலிபர் ஒருவர் 500 ரூபாய் கள்ள நோட்டை கொடுத்து மதுவாங்க முயற்சித்துள்ளார். உடனடியாக சுதாரித்துக் கொண்ட கடை விற்பனையாளர் சபரி பாண்டியன் கள்ள நோட்டு மாற்ற முயன்ற வாலிபர் குறித்து அலங்காநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததன் பேரில் காவல் ஆய்வாளர் சங்கர் கண்ணன் தலைமையில் சார்பு ஆய்வாளர் அசோக்குமார் மற்றும் போலீசார் வாலிபரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். 

விசாரணையில் அவர்   ஆனையூர் ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்த பிரபு (40). என்பதும் இவர் கள்ள நோட்டு மாற்ற முயன்றதும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 34 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த கள்ள நோட்டு இவரிடம் எப்படி வந்தது  இச்சம்பவம் தொடர்பாக யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்று போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad