பயிற்சியில் கலந்து கொண்ட செஞ்சிலுவை சங்க மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழும் வெற்றிக்கோப்பைகளையும் முதன்மை கல்வி அலுவலர் வழங்கி சிறப்பித்தார். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Wednesday, 19 April 2023

பயிற்சியில் கலந்து கொண்ட செஞ்சிலுவை சங்க மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழும் வெற்றிக்கோப்பைகளையும் முதன்மை கல்வி அலுவலர் வழங்கி சிறப்பித்தார்.


மதுரை மாவட்ட ஜூனியர் ரெட் கிராஸ் மாணவர்களுக்கான பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் மதிப்பிற்குரிய மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்  கா.கார்த்திகா அவர்கள் 02.03.23 மற்றும் 03.03.23 இரண்டு நாட்கள் மதுரை அழகர் கோயில் எம்.ஏ.வி.எம் எம் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற மேலூர் கல்வி மாவட்ட அளவிலான ஜூனியர் ரெட் கிராஸ் அமைப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கான உண்டு உறைவிட பயிற்சியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் இன்று பாராட்டு சான்றிதழும் வெற்றிக்கோப்பைகளையும் முதன்மை கல்வி அலுவலர் வழங்கி சிறப்பித்தார். 

இந்நிகழ்வில் மேலூர் கல்வி மாவட்ட கல்வி அலுவலர் முத்துலட்சுமி மேலூர் கல்வி மாவட்ட கல்வி அலுவலர் (இடை நிலை) சங்கீதா சின்னராணி, ரெட் கிராஸ் கன்வினர்  எஸ் ஜான்சன், இணை கன்வினர் கே.மாயாண்டிதுரை பொருளாளர் நாகராஜன் மாணவர்களின் பள்ளி ஆசிரியர்கள், மாவட்ட தகவல் சாதனை அலுவலர்  எம். செந்தில்வேல் குமரன் ஆகியோர் கலந்து கொண்டனர். 


நிகழ்வில் பேசிய முதன்மை கல்வி அலுவலர் உண்டு உறைவிட பயிற்சியில் பங்கு கொண்ட மாணவர்களின் திறமைகளை பாராட்டி "மாணவர்கள் எப்போதும் தனித்திறமைகளை வளர்த்துக் கொள்வது அவசியம் என்பதையும் நல்லொழுக்கம், சமூக, நல்லிணக்கம், ஒற்றுமை, சகோதரத்துவம், வாழ்வியல், திறன் போன்ற பண்புகளை முகாம்களின் மூலம் வளர்த்துக் கொள்வதோடு சமுதாயத்திற்கு தங்களால் இயன்ற பணிகளை செய்வதற்கு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்தி கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad