மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Tuesday, 4 April 2023

மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி.


மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் கடந்த சில தினங்களாக கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் இன்று  அரை மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மழை பெய்ய ஆரம்பித்த சிறிது நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் மற்றும் வணிகர்களுக்கு சிறிது நேரம் பாதிப்பு ஏற்பட்டது. மதுரை புறநகர் பகுதிகளான மேலூர், ஒத்தக்கடை, கருங்காலக்குடி, கொட்டாம்பட்டி, வாடிப்பட்டி, சமயநல்லூர், தேனூர், திருவேடகம்,தஞ்சம் பத்து உள்ளிட்ட பகுதிகளிலிலும் மழை பெய்தது. 

No comments:

Post a Comment

Post Top Ad