மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்துள்ள கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமமான திருமால் கிராமத்தில் 10 ஆண்டு காலமாக கழிவுநீர் தூர் வாராமல் இருக்கிறது. இதற்கான சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஊராட்சி மன்ற தலைவரிடம் புகார் கூறினால் அவரும் கண்டு கொள்ளவில்லை இதனால் ஊர் பொதுமக்கள் கிராமத்தினர் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அதிகாரிகள் இந்த கழிவுநீர் தேங்கி இருப்பதை உடனடியாக தூர் வாரி கொடுக்க வேண்டும் இதனால் பிள்ளைகள் பள்ளிக்கூடத்திற்கு செல்ல முடியாத நிலை உருவாகி வருகிறது, அதுமட்டுமில்லாமல் நோய் தொற்று பரவும் அபாயமும் ஏற்படுகிறது இதை உடனடியாக சரி செய்து தர வேண்டும் என்று ஊர் பொதுமக்கள் அனைவரும் கூறினர்.
No comments:
Post a Comment