மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே ஊத்துக்குளி கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா ஐயப்பன் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் மதிச்சந்திரன் முன்னிலை வகித்தார்.

ஆசிரியை சுடர்மதி வரவேற்றார். தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகளை இந்து முன்னணி நிர்வாகிகள் முத்து பாண்டி, சேகர், முத்துக்குமார், மலைச்சாமி, பிரபு, அம்மாசி வழங்கினர். மாணவ மாணவியரின் நடன நாட்டிய கலை நிகழ்ச்சி நடைபெற்றது. அரசு அரசியல் பிரமுகர்கள் சமூக ஆர்வலர்கள், கிராம பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment