
இதனால் விரக்தியடைந்த இருளப்பன் தனக்கு சொந்தமான தோட்டத்தில் பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து கூடக்கோவில் போலீஸ் நிலையத்தில் இருளப்பன் மகன் மாரியப்பன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள கே. நெடுங்குளம் கிராமத்தைச் சேர்ந்த வலம்புரி (75) என்பவருக்கு கடந்த சில மாதங்களாக கண்பார்வை குறைந்தது. இதில் விரக்தியடைந்த வலம்புரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மண்டலமாணிக்கம் இன்ஸ்பெக்டர் விமலா வழக்குபதிவு செய்து விசாரனை செய்து வருகிறார்.
No comments:
Post a Comment