மாதத்தில் முதல் மாதம் ஆன சித்திரை மாதம் இந்த ஆண்டு சோபகிருது பிறந்து இருக்கிறது. சித்திர வருஷ பிறப்பை முன்னிட்டு அனைத்து கோவில்களிலும்
சிறப்பு அலங்காரம், ஹோமங்கள், விசேஷ பூஜைகள் நடைபெற்றது.
இதில் மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அமைந்துள்ள அருள்மிகு துளசி மணி ஐயப்பன் கோவிலில் சபரிமலையில் முறைப்படி நடந்ததோ அதேபோல் இங்கேயும் பழங்களால் அலங்காரம் செய்து ஐயப்பனுக்கு பூஜைகள் நடைபெற்றது. மேலும் அதிகாலையிலே பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது. இந்த சித்திரை மாதத்தில் மாணவ மாணவியர்கள் படிப்பில் நல்ல முன்னேற்றம் அடையவும் நாடு செழிக்கவும் நல்ல மழை பெய்யவும் வேண்டி பக்தர்கள் அனைவரும் ஐயப்பனை நினைத்து சாமி தரிசனம் செய்தனர்.
இதில் சிறப்பு விசேஷம் என்னவென்றால் ஐயப்பன் கோவில் மேல் சாந்தி பக்தர்கள் அனைவருக்கும் கை நீட்டம் (நாணயம்) வழங்கினார். பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு ஐயப்பனை தரிசனம் செய்து அருட்பிரசாதத்தை வாங்கி சென்றனர்.

No comments:
Post a Comment