
அதன்படி இன்று காலை ஊரக வளர்ச்சி துறையின் ஒட்டுமொத்த ஊழியர்களும் ஒரு நாள் விடுப்பு எடுத்து போராட்ட த்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறுகையில், "மேலூர் ஊராட்சி ஒன்றியம் சருகுவளை யப்பட்டி கிராம ஊராட்சியில் பிரதமருக்கான திட்டப் பணிகளை செயல்படுத்திய 7 அலு வலர்கள் மீது வழங்கப்பட்ட குற்றச்சாட்டு ஆணையை திரும்ப பெற வேண்டும், மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி அளவில் பணி யிடை நீக்கம் செய்யப்பட்ட 4 ஊராட்சி செயலாளர்களுக்கு மீண்டும் பணியிடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
பணியிட மாறுதல் கோரிய அனைத்து நிலை அலுவலர்களுக்கும் உடனடியாக வழங்க வேண்டும், மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி அளவில் இதுவரை நிலுவையில் உள்ள குற்றச்சாட்டு ஆணைகளை இறுதி செய்ய வேண்டும், விடுமுறை நாட்களில் நேரில் மற்றும் காணொளி வாயிலாக நடத்தப்படும் ஆய்வு கூட்டங்களை தவிர்க்க வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி ஒரு நாள் விடுப்பு போராட்டம் நடத்தி வருவதாக தெரிவித்து உள்ளனர்.

No comments:
Post a Comment