மேலும் இந்த கிராமத்து பஞ்சாயத்து தலைவரிடம் பலமுறை கூறியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த கிராமத்தில் ஐந்து பஞ்சாயத்து தலைவர்கள் தேர்தலில் நின்று உள்ளனர் ஆனால் எந்தத் தலைவரும் இந்த கிராமத்திற்கு சாலை வசதிகளை செய்து தரவில்லை. இது குறித்து ஊர் பொதுமக்களிடம் விசாரித்த பொழுது 30 ஆண்டு காலமாக சாக்கடை வசதியும் சாலை வசதியும் செய்தி தரவில்லை அரசு அதிகாரியிடம் பலமுறை மனுக்கள் கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறினர்.

அதனால் எங்கள் கிராமத்தில் உடனடியாக சாலை வசதி செய்து கொடுத்து பொதுமக்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி தர வேண்டும் என்று ஊர் பொதுமக்கள் கூறினார்கள். மேலும் அங்கே அமைந்துள்ள ஆண்டிப்பட்டி கூட்டு குடிநீர் திட்டம் மேல் நீர்த்தேக்க தொட்டியானது பைப் லைனில் கீறல் விழுந்து உடைந்து உள்ளதால் அனைத்து தண்ணீரும் வீணாகி கழிவுநீரில் கலந்து விடுகிறது.
இதை உடனடியாக தமிழக அரசு மற்றும் பொதுப்பணி துறையும் சரி செய்து கொடுக்க வேண்டும் என்று ஊர் பொதுமக்கள் கூறி வருகின்றனர்.

No comments:
Post a Comment