மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்தவர் ஜெகன். இவரது மகள் கேத்தரின் (வயது39). இவர் மதுரையில் புகழ்பெற்ற ரப்பர் நிறுவனத்திற்கு ரப்பர் புஷ் செய்யும் கம்பெனி நடத்தி வருகிறார். இவரது கம்பெனிக்கு ஆடிட்டராக திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள ஹார்விபட்டியை சேர்ந்த செந்தில்குமார்(39) உள்ளார்.

இவர் கேத்தரின் நிறுவனத்திற்கு 2021 முதல் 2023 வரையில் ஜி.எஸ்.டி. வரி கட்டுவதாக கூறி ரூ.5 லட்சம் பணம் வாங்கியுள்ளார். அதில் ரூ.3.5 லட்சத்தை கட்டாமல் மோசடி செய்துள்ளார். இதனை கண்டுபிடித்த கேத்தரின் இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத்திடம் புகார் செய்தார். அதன் பேரில் திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆடிட்டர் செந்தில்குமாரை கைது செய்தனர்.

No comments:
Post a Comment