மதுரை மாவட்டம்.சோழவந்தானில் பிரசித்தி பெற்ற ஜெனகை மாரியம்மன் கோயிலில் வைகாசி திருவிழா 17 நாட்கள் நடைபெறும் இதனை ஒட்டி மூன்றுமாத கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து மே 17ந் தேதி பூச்சொரிதல் விழாவும், மே 22 ந்தேதி திருவிழா கொடியேற்ற நிகழ்வும், மே 30 ந்தேதி பால்குடம், அக்னிசட்டி நிகழ்ச்சியும், மே 31 ந்தேதி பூக்குழி நிகழ்ச்சியும், ஜூன் 6 ந்தேதி தேரோட்டமும், ஜூன் 7 ந்தேதி வைகையாற்றில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெறும். திருவிழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் இளமதி, தக்கார், அலுவலர் பூபதி மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
விழாவையொட்டி, சோழவந்தான் காவல் ஆய்வாளர் சிவபாலன் தலைமையில் போலீஸார் ஈடுபட்டிருந்தனர். விழாவை கான, தென்கரை, முள்ளிப் பள்ளம், திருவேடகம், ஊத்துக்குளி, கச்சிராரிருப்பு உள்ளிட்ட கிராமங்களிலிருந்து பக்தர்கள் பங்கேற்றனர்.

No comments:
Post a Comment