முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மதுரை கூடுதல் நீதிமன்ற கட்டடங்கள் அடிக்கல் நாட்டு விழா! - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Friday, 24 March 2023

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மதுரை கூடுதல் நீதிமன்ற கட்டடங்கள் அடிக்கல் நாட்டு விழா!


தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  முன்னிலையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டாக்டர் டி.ஒய். சந்திரசூட், மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில்  ரூ.166 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கூடுதல் நீதீமன்ற கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் தற்போது பங்கேற்று துவக்கி வைத்தார்.

தமிழக  முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் மயிலாடுதுறையில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து, மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரன் ரிஜிஜு  மயிலாடுதுறையில் அமைக்கப்பட்டுள்ள முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.


இந்த விழாவில், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, உயர்நீதி மன்ற நீதிபதிகள். மாவட்ட முதன்மை நீதிபதி, மாவட்ட நீதிபதிகள், அமைச்சர்கள் திண்டுக்கல் ஐ.பெரியசாமி, ரகுபதி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன், பெரியகருப்பன், தங்கம் தென்னரசு, பி.மூர்த்தி, பி.டி.ஆர்., பழனிவேல் தியாகராஜன்,   சு.வெங்கடேசன்.  மதுரை எம்.பி., உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad