மதுரை வில்லாபுரம் அகத்தியர் 4-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் மணிமாறன் - பாண்டிமீனா தம்பதியினர் ஒரு மகன் மகளுடன் வசித்து வருகின்றனர். அவரது வீட்டின், அருகே வழிவிட்டான் மனைவி மகாலட்சுமி இரண்டு மகளுடன் வசித்து வருகின்றனர்.

மதுரை மற்றும் திருப்பரங்குன்றம் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு 7 மணி முதல் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பொழிந்தது. இந்த நிலையில், மதுரை வில்லாபுரம் பகுதியில் திடீர் இடியுடன் மின்னல் தாக்கியதில் அருகருகே உள்ள இரண்டு வீட்டின் கான்கிரீட் மேல்கூரை இடிந்து வீட்டுக்குள் விழுந்தது.
இந்த நிலையில், வீட்டில் இருந்த பெண்கள் மட்டும் குழந்தைகள் மீது விழாமல் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். மதுரையில், திடீர் பெய்த மழையில் இடியுடன் மின்னல் தாக்கி அருகருகே இரண்டு வீட்டின் கான்கிரீட் மேல்கூரை இடிந்து கீழே விழுந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

No comments:
Post a Comment