திருமங்கலம் அருகே வாலிபர் உள்பட 2 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்தனர். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Monday, 6 March 2023

திருமங்கலம் அருகே வாலிபர் உள்பட 2 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்தனர்.


மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சிந்துபட்டி போலீஸ் சரகம் நாட்டார்மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சிவசாமி மகன் ஜெயபாண்டி(31). இவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் குடும்பப் பிரச்சினை காரணமாக வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 


ஆனால் செல்லும் வழியிலேயே ஜெயபாண்டி பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஜெயபாண்டியின் தாய் பாண்டியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் சிந்துபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  பேரையூர் போலீஸ் சரகம் கோபாலபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமாரசாமி. இவருடைய மனைவி பொன்னுத்தாய். இவர்களுக்கு ஈஸ்வரன் என்ற மகன் உள்ளார். 


பொன்னுத்தாய் கடந்த ஐந்து வருடங்களுக்கு உடல்நல பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் வீட்டில் யாருமில்லாத போது பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு பேரையூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து பொன்னுத்தாயின் மகன் ஈஸ்வரன் கொடுத்த புகாரின் பேரில் பேரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

No comments:

Post a Comment

Post Top Ad