மதுரையில் கத்தி முனையில் வழிப்பறி நான்கு பேர் கைது. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Sunday, 9 October 2022

மதுரையில் கத்தி முனையில் வழிப்பறி நான்கு பேர் கைது.

மதுரையில்  மணியில்  வெவ்வேறு சம்பவங்களில் வழிப்பறி செய்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். மேலமடை பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் சக்திவேல். இவர் கருப்பாயூரணி சீமான் நகரில் வேலை செய்து கொண்டு இருந்தபோது யாகப்பா நகரை சேர்ந்த முத்துகிருஷ்ணன் மகன் சபரி ராஜ் என்பவர் அவரை மிரட்டி பணம் பறிக்க முயற்சி செய்தார். இந்த சம்பவம் குறித்து சக்திவேல் மாட்டுத்தாவனி போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் பணம் பறிக்க முயன்ற சபரிராஜை கைது செய்தனர் .


ஆணையர் கணபதி நகரை சேர்ந்தவர் உதயகுமார் 60. இவர் கூடல் நகர் அலங்காநல்லூர் மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அவரை ஆணையூர் மூத்துநகரைச் சேர்ந்த மச்சக்காளை மகன் அருண்குமார் என்ற கருவாயன் 21 என்பவர் கத்தி முனையில் மிரட்டி அவரிடம் இருந்து ரூபாய் 500 ஐ வழிப்பறி செய்துவிட்டார் .இந்த சம்பவம் குறித்து உதயகுமார் கூடல்புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபர் அருண்குமாரை கைது செய்தனர் .


ஆரப்பாளையம் பொன்னகரம் ஆறாவது தெருவை சேர்ந்தவர் மனோகரன் 48 .இவர் ஆரப்பாளையம் டி.டி. ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அவரை வழிமறித்த மஞ்சள் மேட்டு காலனியைச் சேர்ந்த மணிமாறன் மகன்  27 என்ற வாலிபர் வழிமறித்து கத்தி முனையில் மிரட்டி அவரிடம் இருந்து ரூபாய் 500ஐ வழிப்பறி செய்துவிட்டார்.இந்த சம்பவம் குறித்து  கரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் வழிப்பறி செய்த மதனை கைது செய்தனர்.


 பொன்னகரம் சுடுதண்ணி வாய்க்காலை சேர்ந்தவர் பாண்டி 40. இவர் ஆறுமுகம் சந்து சந்திப்பு ஒர்க்ஷாப் ரோட்டில் சென்று கொண்டிருந்தார் .அவரை பேச்சியம்மன் படித்துறையைச் சேர்ந்த முருகன் என்ற தக்காளி முருகன் 31 என்பவர் வழிமறித்து அவரிடம் இருந்து ரூபாய் 650ஐ வழிப்பறி செய்துவிட்டார். இது குறித்து பாண்டி புகாரில் திலகர்திடல் போலீசார் வழக்கு பதிவு செய்து முருகனை கைது செய்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad