மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே மைக்குடி கிராமத்தில், கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் ரூபாய் 10 லட்சம் செலவில் போடப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட நீர் வழங்கும் இயந்திரம் செயல்படாமல், இயந்திரத்தை பூட்டிய அறையில் வைத்து காட்சி பொருளாக வைக்கப்பட்டுள்ளது. இதனால், மக்களுக்கு பயன்படாதவாறு அரசு பணம் வீணடிக்கப்பட்டுள்ளது .
மேலும், இக்கிராமத்தில் தாழ்த்தப்பட்ட இன மக்கள் வசிக்கும் பகுதிகளில் , குடிநீர் இன்றி பல ஆண்டுகளாக அவதிப்பட்டு வரும் நிலையில் , அவர்களுக்கு தெருவிளக்கு இன்றியும் அவதிப்பட்டு வருவதுடன் , பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பின்றி வாழ்ந்து வருவதாக தெரிவித்த மக்கள், குடிநீரை நாள்தோறும் ரூபாய் 10க்கு வாங்கி குடிக்கும் நிலை உள்ளதாக தெரிவிக்கின்றனர். குடிநீர், தெரு விளக்கு, சாலை வசதி போன்றவற்றை ஊராட்சி நிர்வாகம் செய்து தர சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment