மதுரையின் குற்ற சம்பவங்கள். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Tuesday, 11 October 2022

மதுரையின் குற்ற சம்பவங்கள்.

மாட்டுத்தாவணி அருகே நான்காவது மாடியில் இருந்து தவறி விழுந்த ஐடி நிறுவன அதிகாரி பலி


மதுரை அக்11 மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே நான்காவது மாடியில் இருந்து தவறி விழுந்த ஐடி கம்பெனி அதிகாரி பலி.


இராமநாதபுரம் மாவட்டம் உப்பூர் சத்திரத்தை சேர்ந்தவர் மார்கண்டன் மகன் தினேஷ் 30.இவர்  மாட்டுத்தாவணி அருகே பாண்டி கோவில் ரோட்டில்  ஐ.டி. கம்பெனியில்  பணிபுரிந்து வந்தார். இவர் நான்காவது மாடியில்  இருந்தபோது  கால் தவறி கீழே விழுந்தார். இதில் பலமாக அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து அவருடைய அண்ணன் விக்னேஷ் மாட்டுத்தாவணி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தினேஷின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


அண்ணா நகரில் நோய்வாய்ப்பட்டதால் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை


அண்ணாநகர் ஆறாவது குறுக்கு தெருவை சேர்ந்தவர் செல்வகுமார் மனைவி சுசித்ரா 26. இவர் நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்தார். அதற்கு சிகிச்சையும் பெற்று வந்தார் .நோய் குணமடையவில்லை .இதனால் மனமுடைந்து வீட்டில் தனியாக இருந்தபோது தூக்க போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து அண்ணா நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து சுசித்ராவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


ஆனையூரில் இ..பி போஸ்டடை தொட்டவர் மின்சாரம் தாக்கி பலி


ஆணையூரில் இபி போஸ்ட்டை தொட்டவர் மின்சாரம் தாக்கி பலியானார், ஆனையூர் முத்து நகரை சேர்ந்தவர் பாலமுருகன் 42. இவர் அதே பகுதியில் நடந்து சென்ற போது அங்கு  அருகில் இருந்த இபி போஸ்ட்டை தொட்டார். அப்போது அதில் மின் கசிவு ஏற்பட்டிருந்தது. அதனால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்த கூடல் புதூர் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து அவருடைய மனைவி லட்சுமி கொடுத்த புகாரில் வழக்கு பதிவு செய்து பாலமுருகனின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad