முள்ளிபள்ளம்அரசு மேல்நிலைப் பள்ளிக்கு கூடுதல் கட்டடம் கட்டித்தர பெற்றோர்கள் மாணவர்கள் அரசுக்கு கோரிக்கை. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Sunday, 2 October 2022

முள்ளிபள்ளம்அரசு மேல்நிலைப் பள்ளிக்கு கூடுதல் கட்டடம் கட்டித்தர பெற்றோர்கள் மாணவர்கள் அரசுக்கு கோரிக்கை.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் முள்ளி பள்ளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர் இந்த பள்ளியில் கடந்த சில வருடங்களாக மாணவர்களின் சேர்க்கை விகிதம் அதிகரித்து வந்துள்ள நிலையில் ஏற்கனவே உள்ள பள்ளி கட்டிடங்களே இருப்பதாகவும் தற்போது போதிய இடவசதி இல்லாததால் வகுப்பறைகளை மரத்தடி நிழலிலும் தனியார் கட்டிடத்திலும் நடத்துவதாகவும் இதனால் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மிகவும் சிறமப் படுவதாகவும் உடனடியாக தமிழக அரசு இதனை கருத்தில் கொணடு தேவையான அளவில் கூடுதல் பள்ளி கட்டிடங்களை கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை எடுத்துள்ளனர் இது  சம்பந்தமாக விரைவில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் அவர்களை நேரில் சந்தித்து மனு அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad