மதுரை மாவட்ட கோயில்களில், நவராத்திரி விழாவை ஒட்டி பல்வேறு அலங்காரங்களில் சுவாமி பக்தர்க்கு அருள்பாலித்தனர், கோயில்களில் நவராத்திரி விழா ஒட்டி, மதுரை அண்ணா நகர், தாசில்தார் நகர், சித்தி விநாயகர் ஆலயத்திலும், மேலமடை சௌபாக்கிய விநாயகர் ஆலயத்திலும், மதுரை வைகை காலனி வைகை விநாயகர் ஆலயத்திலும், மதுரை கோமதிபுரம் ஜூப்ளி டவுன் அருள்மிகு ஞான சித்தி விநாயகர் ஆலயத்திலும், மதுரை சர்வேஸ்வரர் கோயில் ஆலயத்திலும், வரசித்தி விநாயகர் ஆலயத்திலும், தினசரி மாலை நேரங்களில் சுவாமி பல்வேறு அலங்காரங்களில் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.
இதை அடுத்து, பக்தர்களுக்கு கோவில் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை, ஆலய நிர்வாகிகள் செய்து வருகின்றனர், இதே போல, சோழவந்தான் அருள்மிகு ஜனகை மாரியம்மன் திருக்கோவிலிலும், சிவன் ஆலயத்திலும், திரௌபதி அம்மன் ஆலயத்திலும், தென்கரை மூடனார் சுவாமி ஆலயத்திலும் நவராத்திரி விழா நடந்து வருகிறது.
No comments:
Post a Comment