மதுரை வாடிப்பட்டியில் நடைபெற்ற ஒருங்கிணைந்த மாற்றுத்திறனாளிகள் முகாமில். மாற்றுத்திறனாளிகள் அலைக்கழிப்பு. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Thursday, 29 September 2022

மதுரை வாடிப்பட்டியில் நடைபெற்ற ஒருங்கிணைந்த மாற்றுத்திறனாளிகள் முகாமில். மாற்றுத்திறனாளிகள் அலைக்கழிப்பு.

மதுரை வாடிப்பட்டியில் நடைபெற்ற ஒருங்கிணைந்த மாற்றுத்திறனாளிகள் முகாமில். மாற்றுத்திறனாளிகள் அலைக்கழிப்பு சரியாக திட்டமிடாத அதிகாரிகள் மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு.


மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாடிப்பட்டி தாலுகா அளவிலான ஒருங்கிணைந்த மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாமை மதுரை பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ஏற்பாட்டில் இன்று காலை 10 மணி அளவில் தொடங்கி வைப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது


இந்த விஷயத்தை தெரிந்த கொண்ட சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தனது தொகுதிக்குள் மதுரை எம்பி அதிகாரம் செலுத்துவதை விரும்பாததால் கடந்த இரண்டு நாட்களாக வாடிப்பட்டியில் முகாமிட்டு மாற்றுத்திறனாளிகள் உதவி.முகாமிற்கு தேவையான ஏற்பாடுகளை தனது கட்சியினர் மற்றும் அதிகாரிகளை முடிக்கிவிட்டு செய்து வந்தார்.


இந்த நிலையில் இன்று காலை வாடிப்பட்டியில் ஒருங்கிணைந்த மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாம் நடைபெற இருந்த நிலையில் விழாவிற்கு காலை 8 மணி முதல் வாடிப்பட்டி தாலுகா அளவிலான அனைத்து கிராமங்களிலிருந்தும் திமுகவினரால் அழைத்து வரப்பட்ட சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் குவிந்தனர்


இதனை சற்றும் எதிர்பார்க்காத பாராளுமன்ற எம்பி அவர்களின்  கட்சியை சார்ந்த தோழர்கள் மற்றும் மாவட்ட மாநில நிர்வாகிகள் மதுரை பாராளுமன்ற எம்பி வெங்கடேசன் பெயர் குறித்த பணியினை அங்கிருந்து கட்சியினருக்கு அணிவித்து மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உதவிகளை செய்வார்கள் என்று மேடையில் தொடர்ந்து அறிவித்த வண்ணம் இருந்தனர்.


மேலும் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த  வாடிப்பட்டி மற்றும் அலங்காநல்லூர் ஒன்றிய பகுதியை சேர்ந்த நிர்வாகிகள் மாற்றுத்திறனாளிகளுக்கு நேரில் சென்று விண்ணப்பங்களை பூர்த்தி செய்வது விண்ணப்பங்களை கொடுக்கும் முறைகளை சொல்லித் தருவது உள்ளிட்ட பணிகளை தீவிரமாக மேற்கொண்டனர்.


இதனை அறிந்த சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தனது கட்சியினரிடத்திலும் அதிகாரிகளிடத்திலும் மறைமுகமாக விழாவிற்கான ஒத்துழைப்பை வழங்க வேண்டாம் என்று கூறியதாக தெரிய வருகிறது, இதனை அடுத்து வருவாய்த்துறை மற்றும் மற்ற துறையை சேர்ந்த அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உதவிகளை செய்யாமல் தாங்கள் தனியாக சென்று அமர்ந்து கொண்டனர்.


இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளும் அவருடன் வந்த உறவினர்களும் செய்வதறியாது திகைத்தனர், மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அவருடன் வந்த உறவினர்கள் அமர்ந்து கொண்டதால் தாமதமாக வந்த மாற்றுத்திறனாளிகள் இருக்க இடம் கிடைக்காமல் வெயிலிலும் மற்றும் அருகில் இருந்த மரத்தடி நிழலிலும் அமர்ந்தது அங்கிருந்த பொது மக்களிடையே அதிகாரிகள் மீது மிகுந்த எரிச்சலை உண்டாக்கியது.


மேலும் காலை 8 மணிக்கு வந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவரின் உறவினர்களுக்கு ஒரு மணி வரை பிஸ்கட்டுகளோ தண்ணீர் பாட்டில்களோ வழங்காததால் ஒரு சில மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதானவர்கள் சோர்வடைந்த நிலையில் மயங்கி விழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.


மேலும் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்து தனது கட்சியினரை முடிக்கி விட்டிருந்த மதுரை பாராளுமன்ற எம்பி வெங்கடேசன் அவர்களும் சூழ்நிலை அறிந்து விழாவிற்கு வருவதை தவிர்த்து விட்டார், ஆகையால் சுமார் 11 மணிக்கு மேல் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்களும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவதில் இருந்து பின்வாங்க ஆரம்பித்ததால் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவருடன் வந்தவர்கள் அங்கும் இங்கும் அலைந்து திரிந்தது பார்ப்பதற்கு பரிதாபமாக இருந்தது.


மேலும் இது குறித்து பெயர் சொல்ல விரும்பாத திமுகவினர் கூறிய போது மாற்று திறனாளிகள் முகாமிற்கு வேண்டிய ஏற்பாடுகள் அனைத்தையும் சோழவந்தான் எம்எல்ஏ வெங்கடேசன் அவர்கள் செய்து வந்த நிலையில் இன்று காலை கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் தாங்கள் ஏற்பாடு செய்தது போல் விளம்பரப்படுத்திக் கொண்டது எம்எல்ஏ வின் ஆதரவாளர்களுக்கு பிடிக்கவில்லை என்றும் அதனால் வாய்மொழியாக அதிகாரிகளுக்கு நிகழ்ச்சிக்கான ஒத்துழைப்பை வழங்க வேண்டாம் என்று கூறியதாக தெரிவித்தனர்.


மேலும் கம்யூனிஸ்ட் கட்சியினர் எவ்வளவோ முயற்சி செய்தும் கூட்டத்தை ஒருங்கிணைக்கவும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்யவும் முடியவில்லை, இதனால் மிகவும்எதிர்பார்த்து இருந்த மாற்றுத்திறனாளிகள் முகாம் ஏமாற்றமாக முடிந்ததாகவும், மேலும்அங்கு வந்த மாற்றுத்திறனாளிகள் கூறும்போது இந்த முகாம் எந்த ஒரு பிரயோஜனமும் இல்லாமல் போய்விட்டது என்றும் கூறி சென்றது மிகுந்த மன வருத்தத்தை உருவாக்கியது.


மேலும் சுமார் 12 மணி அளவில் வந்த மாவட்ட ஆட்சி தலைவர் அவர்களும்  மாற்றுத்திறனாளி முகாமை பார்வையிட சென்றபோது அங்குள்ள எலும்பு முறிவு பகுதியில் உள்ள அறையில் எலும்பு முறிவுக்கான மருத்துவர் வராதது கண்டு அதிர்ச்சி அடைந்தார் அது குறித்து கேட்கையில் மருத்துவர் வந்து கொண்டிருப்பதாக தகவல் தெரிவித்தனர்


மேலும் கூடுதல் ஆட்சியர் அவர்கள் கூறிய போது முடிந்த அளவு பயனாளிகளுக்கு உதவுமாறும் கூடுதலாக வரும் பட்சத்தில் அவர்களின் பெயர் ஊர் மொபைல் நம்பரை வாங்கி வைத்துக்கொண்டு அனுப்பி வைக்கவும் அலுவலகம் சென்ற பின்பு மொபைலில் தொடர்பு கொண்டு அவர்களின் பிரச்சனைகளை கேட்டு தீர்வு காணலாம் என்றும் கூறி சென்றது அங்கிருந்த பொதுமக்களிடையே.ஒருவித மன வருத்தத்தை ஏற்படுத்தியது


மாற்றுத்திறனாளிகள் அலைக்கழிக்கப்படுவதை தாமதமாக புரிந்து கொண்ட சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் தனது பெயர் கெட்டுவிடக்கூடாது என்பதற்காக முகாம் முடியும் மாலை நாலு மணி வரை இருந்து பயனாளிகளுக்கு தேவையான உதவிகளை செய்து விட்டு சென்றதாக கட்சியினர் கூறினார். 


எது எப்படி இருந்தாலும் முறையாக திட்டமிடாதாலும் அதிகாரிகளின் போதிய ஒத்துழைப்பு இல்லாததாலும் சிறப்பாக நடந்து முடிந்திருக்க வேண்டிய மாற்றுத்திறனாளி முகாம் கடும் விமர்சனத்திற்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகி விட்டதாக அங்கிருந்தவர்கள் கூறி சென்றது மிகுந்த வருத்தத்தை உண்டாக்கியது.

No comments:

Post a Comment

Post Top Ad