தென் இந்தியாவில் மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பிரபல தங்கமயில் ஜூவல்லரி நிறுவனம் புதிதாக மின்மினி என்ற பெயரில் "மின்மினி டைமண்ட் " என்னும் புதிய பிராண்டை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதற்கான துவக்க விழா நேற்று மதுரை பார்ச்சூன் பாண்டியன் நட்சத்திர விடுதியில் நடைப்பெற்றது, இந்த நிகழ்ச்சியில் தங்கமயில் நிறுவனத்தின் இணை இயக்குநர்கள் ரமேஷ் மற்றும் குமார் ஆகியோர் பங்கேற்று "மின்மினி டைமண்ட்" என்னும் புதிய பிராண்டை அறிமுகப்படுத்திய பின்பு செய்தியாளர்களிடம் இது குறித்து மேலும் கூறும் போது எங்களுடைய "மின்மினி டைமண்ட் ஜூவல்லரி" என்பது மாறி வரும் வாடிக்கையாளர்களின் லைப் ஸ்டைலுக்கு தனி மிடுக்கையும், அழகையும் அளித்திடும். இவை தனித்தன்மை வாய்ந்த வடிவமைப்பு. மேலும், " ஒவ்வொரு விசேஷத்திற்கும் ஏற்ற வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு உள்ளன " என்றனர்.
விழாவில், துணை பொது மேலாளர் சைலஷா, நிதி மேலாண்மை பொது மேலாளர் கோபு, விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் பிரிவு பொதுமேலாளர் அருண் ஆகியோர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment